த.செ.ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரானா டகுபதி, மஞ்சு வாரியர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க கோரி பழனிவேல் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். மேலும் தமிழக அரசு சென்சார் போர்டு மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.