தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ரானா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாஸில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு வேட்டையன் படத்தின் டீசரை பட குழு வெளியிட்டது. மேலும் இந்த டீசர் வீடியோ மிகவும் அதிரடியாக அமைந்துள்ள நிலையில் தற்போது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.