தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக தனது பயணத்தை துவங்கி தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூரி, சந்தானம். இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களாக தங்களது திரைபயணத்தை தொடங்கினர்.

நடிகர் சூரி, வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சூரி ஆக பிரபலமானதை அடுத்து “விடுதலை” திரைப்படம் அவரை சிறந்த ஹீரோவாகவும் மாற்றி உள்ளது.

தற்போது நடிகர் சூரி நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படம் வரும் மே மாதம் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அதே நாளில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள  “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படமும்  வெளியாக இருக்கிறது.

இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகப் போகும் அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இரண்டு பிரபல காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்து வெளியாகும் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ஜெயிக்கப் போவது யார்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலாவி வருகின்றன.