
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் நடிப்பது மட்டுமின்றி குழந்தைகளின் பிரத்தியேகமான ஆடை நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட ஆலியா பட்டுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நடிகை ஆலியா பட் மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் 2497 சதுர அடி பரப்பில் 37.8 கோடி மதிப்பில் புது அப்பார்ட்மெண்ட் ஒன்றினை வாங்கியுள்ளார்.
இந்த புதிய வீட்டை அவருடைய தயாரிப்பு நிறுவனமான Eternal Sunshine productions Pvt மூலம் வாங்கியுள்ளார். இந்த புதிய வீட்டுக்கு பத்திரப்பதிவுக்காக மட்டுமே 2.26 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். இது மட்டுமின்றி ஜூகு பகுதியில் இரண்டு புதிய பிளாட்டுகள் அதை அவருடைய அக்காவுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த புதிய பிளாட்டின் விலை 7.68 கோடி ரூபாய் ஆகும். மேலும் தன்னுடைய அக்காவுக்காக விலை உயர்ந்த வீட்டை நடிகை ஆலியா பட் பரிசாக கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
