
ஹன்சிகாவின் திருமணம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா சென்ற டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோகைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 450 வருட பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் இருக்கும் முண்டோட்டோ கோட்டையில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றார்கள். இந்த நிலையில் ஹன்சிகாவின் திருமணம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் திருமணத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கின்றது. இதனை ஹன்சிகா தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.
Lots of Love, Lots of Happiness and a bit of Drama… #HotstarSpecials #HansikasLoveShaadiDrama Streams from 10th Feb only on @disneyplushotstar@ihansika @Avinaash_Offi #Uttam_Domale @nowme_datta @sajeed_a @ajaym7 #Hansika #HansikaMotwani pic.twitter.com/tdPGcYhkr3
— Hansika (@ihansika) January 30, 2023