
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார். நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் நெருங்கி பழகி வருவதாக இணையதளங்களில் அடிக்கடி கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் குஷி படப்பிடிப்புக்காக தற்போது படக்குழு துருக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் துருக்கியில் உள்ள ஒரு ஹோட்டலில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார். அதோடு விஜய் தேவிர கொண்டவை புகழ்ந்தும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நடிகர் விஜய் தேவர கொண்ட சமந்தா எனக்கு மிகவும் பிடித்த பெண் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர்கள் சாப்பிடும் மேஜையில் ஒரு மதுபான பாட்டில் இருப்பதால் அதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.