கோடிகளில் சம்பளம் வாங்கி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் அறியப்பட்ட கதாநாயகியாகயுள்ளார். மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான கதாநாயகியாகவும் உள்ளார். இதற்கிடையில் சிறிது காலம் ஹிட் கொடுக்காத திரிஷாவிற்கு 96 படம் மறுவாழ்வு அளித்தது. தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அவர் ஜோடியாக நடித்த வருகின்றார். இந்த வருடம் விடாமுயற்சி, குட் பேட், சூர்யா 45 என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் 41 வயது இளமை மாறாமல் இருக்கும் இவருக்கு இன்னும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலகப் போவதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் அவர் முன்பு அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது, அதில் CM ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது எனவும், நீங்க வேணா பாருங்க 10 வருஷத்துல CM ஆகி காட்டுறேன் எனவும், அவர் தெரிவித்து இருக்கின்றார். இவரது இந்த கனவை தற்போது விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகம் மூலம் நிறைவேற்றிக் கொள்ளப் போகின்றாரா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீப காலமாக விஜய்யுடன் இணைத்து பேசப்பட்ட இவர் த.வெ.க -வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கப் போவதாகவும் தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. இன்னும் கொஞ்சம் மேல போய் விஜய் த.வெ.க-வில் திரிஷாவிற்கு முக்கிய பதவி கொடுக்கப் போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க திரிஷா அரசியலுக்கு வரப்போவது இல்லை எனவும், உயிர் இருக்கும் வரை அவர் சினிமாவில் தான் இருப்பார் எனவும், அது தொடர்பாக பரவி வரும் செய்திகள் எதுவும் உண்மை இல்லை என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.