எப்போதும் வாகனங்களுக்கு பேன்சி நம்பர் வாங்க பலர் ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக சில ஆயிரம் வரை கூட பணத்தை செலவு செய்ய தயாராக இருப்பார்கள். இந்த பேன்சி நம்பரை எளிமையான முறையில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும் என்பதற்காக அதனை வாங்குகின்றனர்.

இந்த வகையிலான ஃபேன்ஸி நம்பர் அவற்றின் இலக்கங்கள் மற்றும் எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகிறது. இது தனிப்பட்ட விருப்ப தேர்வு மற்றும்  அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் போக்குவரத்து துறை ஏலம் ஒன்றை நடத்தியது. அதில் KL 007 DG 0007 என்ற ஃபேன்சி நம்பரை ரூ.45 லட்சம் ஏலத்திற்கு போனது. இது அம்மாநிலத்தில் வாகன பதிவு விற்பனையிலேயே அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. இதே போன்று KL 07 DC 0001 என்ற மற்றொரு எண் ₹25 லட்சம் போனது.

இந்த 45 லட்சம் மதிப்பிலான பேன்சி நம்பர் பிளேட்டை  கேரளாவின் எர்னாகுலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் வாங்கி உள்ளார். இந்த நம்பர் பிளேட் ஆர்டிஓ-வில் ஏலம் விடப்பட்டபோது 5 போட்டியாளர்களை தோற்கடிக்க இவ்வளவு தொகை கொடுத்து இருக்கிறார். இந்தியாவிலேயே இதுதான் அதிக விலைக்குப் போன நம்பர் பிளேட் என்று கூறப்படுகிறது.