
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா 2” திரைப்படம் சமீபத்தில் அனைத்து திரையரங்குகளிலும் கலெக்ஷன் வேட்டை நடத்தி வருகிறது. இந்தப் படத்தில் வரும் பாடல்களுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வினோதமாக ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதேபோன்று சமீபத்தில் தாசன் என்ற கலை ஆர்வம் உடைய ஒரு நபர் கேரளாவில் புஷ்பா படம் வெளியிட்ட திரையரங்கில் வினோதமான முறையில் வேடம் அணிந்து வந்து வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இவர் இந்த படத்தில் வரும் ஆந்திர கோவில்களில் பெண் வேடமிட்டு ஆண்கள் கொண்டாடும் பழக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக கங்கம்மா தல்லி வேடம் அணிந்து வரும் நடிகர் அல்லு அர்ஜுனை போன்றே இவரும் சிகப்பு மற்றும் நீல நிற வண்ணங்களை உடலில் பூசி பெண் வேடமிட்டு இருந்தார்.மேலும், தனது பெரிய வயிற்றில் அல்லு அர்ஜுனின் புகைப்படத்தையும் வரைந்து வினோதமான தோற்றத்தில் இருந்தார்.
தாசன் தனது 12 வயதிலிருந்து புலிவேஷம் போன்ற பல வேஷங்களை போட்டுள்ளார். சமீப காலங்களாக பிரபலமாகும் நடிகர்களின் படவேடங்களை போடுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர். இந்த நிலையில் இவர் புஷ்பா 2 வேடம் அணிந்து திரையரங்கில் ஆடிய காட்சி சமூக வலைதளங்களில் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
View this post on Instagram