தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது எப்படி? என்பது குறித்து ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பொறுப்பேற்ற கையோடு திருமாவளனை சந்தித்து ஆசி பெற்றார்.  இருவரும் 40 நிமிடங்கள் பேசிக்கொண்டார்கள். அப்பொழுது அதிமுகவோடு இணைந்து தேர்தல் வியூக பணிகளை முன்னெடுக்க போவதற்கான எனக்கு தகவல் கிடைத்தது. பிறகு எப்படி இந்த மனம் மாற்றம்? என்று திருமாவளவன் கேட்டாராம். அதற்கு கடந்த மூன்று மாதங்களில் நடந்தவைகளை விவரித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. விசிகவில் இணைந்து மீண்டும் அரசியல் செய்ய முடியுமா? என்ற கேள்வியாக எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

விஜிய்யிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தேன். அப்பொழுது அவரிடம் அழைப்பு வராத நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் பேசினார். அதிமுகவிற்காக வேலை செய்வதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சூழலில் தான் நம் நண்பர் ஒருவர் விஜய்யை  சந்தித்தார். அதே நாளில் நண்பர் எனக்கு போன் செய்து விஜயிடம் ஃபோனை கொடுத்தபோது விஜய் ஐந்து நிமிடம் என்னிடம் பேசினார்.

அப்போது நாளைக்கு வந்து என்னை சந்திக்கிறீர்கள் என்று அழுத்தமாகச் சொன்னார் . அந்த சந்திப்பில் தான் நான் நிறைய விஷயங்களை தெளிவுபடுத்தியதால் கட்சியில் இணைந்து தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் என்று வலியுறுத்தினார் விஜய். அதனால் இணைந்து விட்டேன். உங்களைப் பற்றி விஜய் நிறைய விசாரித்தார். அவரிடம் சொல்லிவிட்டு தான் உங்களை சந்திக்க வந்தேன் என்று பேசியிருக்கிறார்கள்.