
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வலுவான கட்டமைப்பு கொண்ட நல்ல மருத்துவர்களை கொண்ட நல்ல மருத்துவமனை தமிழகத்துலக இருக்கு. அதுல எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது. திறனற்ற அரசாங்கம் இருக்கு இருக்கின்ற பொழுது, வழிநடத்தக் கூடிய… தலைமை ஏற்று இருக்கக்கூடியவர்கள் திறனற்று இருக்கின்ற பொழுது இது போன்ற நிலை ஏற்படும். இப்போ இத கூட இவ்ளோ சப்பை கட்டு கட்ட வேண்டிய நிலை இல்ல. ஒரு தாய் வருத்தப்பட கூடிய அளவிற்கு…. வேதனை படக்கூடிய அளவுக்கு….. வெந்த புண்ணுல வேல் பாய்ச்சியது போல கருத்துக்களை அமைச்சர் பேசுவது தவறு…
செய்த தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று கொண்டு, தவறை தவறு என்று சொல்லிவிட்டு, இனி போல் இந்த தவறுகள் நடக்காது என்று வேற எந்த குழந்தைக்கும் நடத்தக்கூடாது என்ற உறுதியாவது அமைச்சர் தருவதற்கு முன் வர வேண்டும் அல்லவா? … அது தான் பத்திரிக்கையாளர்கள் உங்களுடைய எதிர்பார்ப்பு… இங்கு இருக்கக்கூடிய எல்லா நோயாளிகளுடைய எதிர்பார்ப்பு… என்னுடைய எதிர்பார்ப்பு….
அதிமுக சார்பில் அந்த குழந்தைக்கு மருத்துவ உதவி செய்யப்படுமா ….நிச்சயமா அந்த தாய் கிட்ட சொல்லி இருக்கோம் எடப்பாடி அவர்கள் உங்களை சந்தித்து வர சொல்லி இருக்காங்க. என்ன உதவி வேணும்னாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று சொல்லி இருக்காங்க. என்ன கேட்டாலும் செய்வேன்னு சொல்லி இருக்காங்க என தெரிவித்தார்.