இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களுடைய மனதில் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. வாக்களித்த பிறகு தான்  முடிவு தெரியும். எங்களை பொறுத்த வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி பாண்டிச்சேரி உட்பட 40 இடங்களிலும் வெல்லும்,  வெற்றி பெறும். ஏன் என்று சொன்னால் ? கடந்த சட்டமன்ற தொகுதியிலே நீங்கள் பாருங்கள்.

2021 சட்டமன்ற தேர்தலில் பார்த்தீர்கள் என்றால் ? அப்போது நாங்கள் ஏழு இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளை நீங்க ஒன்னா சேர்த்து பார்த்தீங்கன்னா…  ஏழு தொகுதிகள் வெற்றி பெற்றிருக்கிறோம். சேலத்தில் மட்டும் 2 லட்சத்து 50 வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம். அப்படி பல இடங்களில் நாங்க வெற்றி பெற்றிருக்கிறோம்.

சிதம்பரத்தில் 324 வாக்கு தான் குறைவு. ஈரோட்டில் 7500 ஓட்டு தான் குறைவு. நாமக்கல்ல 15,400 ஓட்டு தான் குறைவு. இந்த மூன்று தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எங்களுடைய வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஆகவே இது எளிதாக வெற்றி பெற வேண்டியது. மீதி கள்ளக்குறிச்சி 20 ஆயிரம் ஓட்டு தான், வேலூர் 27000 ஓட்டலில் நாங்க வெற்றி வாய்ப்பு இழந்திருக்கிறோம்,

காஞ்சிபுரத்தில் 42,000,  கடலூரில் 50 ஆயிரம் இப்படி பல நாடாளுமன்றத்தில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவாக…  கிட்டத்தட்ட பத்து இடங்கள் இருக்கிறது.  ஒரு லட்சத்துக்கு கீழ 7 இடங்கள் இருக்குது. ஆக உறுதியா நூற்றுக்கு நூறு சதவீதம் 40 இடங்களிலும் அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என தெரிவித்தார்.