
தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமான மருந்து பொருட்கள் போன்றவை அதிகமான அளவில் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற தென் மாநிலங்களின் சட்ட ஒழுங்கு, நீர் மேலாண்மை குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கஞ்சா தாவரங்கள் வளர்ப்பது முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட டி.ஜி.பிகளிடம் கடத்தல் பொருள்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தப்படுவது குறித்து எந்தவித கேள்வியும் கேட்கவில்லை. கஞ்சா போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகள் பற்றி அவர்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
கஞ்சா செடிகளை பயிரிடுவது தடுக்கப்பட்டது என மட்டுமே கூறியுள்ளார். எத்தனை ஏக்கரில் பயிரிட்டு உள்ளன?, கஞ்சா செடிகளை பயிரிடுவதை கட்டுப்படுத்துவது குறித்த நடவடிக்கைகள் எடுத்தவை என்னென்ன? எந்த அளவு கஞ்சா செடிகள் கட்டுக்குள் உள்ளன?,இந்தக் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க தயாராக உள்ளாரா? என அவர் கேள்வி எழுப்பினார். நாள்தோறும் தமிழகத்தில் பத்திரிக்கை, ஊடகங்களில் கஞ்சா கடத்தல் குறித்த செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. கஞ்சா, ஊசி போன்ற மருந்து பொருட்கள் (மெத்தமெட்டின்) போன்ற பொருட்கள் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரை குறி வைத்து விற்பனையாகிறது. அரசு பணியாளர்கள் தங்கும் விடுதிகளுக்கு அருகிலும் போதைப்பொருள் விற்பனை நடந்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பலவகையான போதைப் பொருள்கள் வெளி நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சமீப காலங்களில் அதிகமாக தகவல்கள் வெளியாகின்றது வருந்தத்தக்க விஷயமாகும். இதனை ஆளுங்கட்சியான திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மத்திய போதை பொருள் கடத்தல் அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான போதைப் பொருள்களை கைப்பற்றி உள்ளதாகவும் அதன் மதிப்பு பல்லாயிரம் கோடியாக இருக்கும் எனவும் தகவல்கள் நாள்தோறும் வந்து கொண்டே உள்ளன. இதில் முக்கிய புள்ளியான திமுகவின் தொலைதூர அணி ஜாபர் கூட்டாளிகள் இந்த கடத்தல் தொழிலை செய்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன.
சமீபத்தில் வெளிவந்த போதைப்பொருள் கடத்தல் விவரங்கள் குறித்து அவர் கூறியதாவது, 2021 ஆம் ஆண்டு பல கோடி மதிப்புள்ள மெத்தமெட்டின் என்ற போதைப் பொருள் 4 கிலோ வரை கைப்பற்றப்பட்டது. இதேபோன்று 2023 ஆம் ஆண்டு மெத்தகுவாலோன் என்ற போதைப்பொருள் 26 கிலோ வரை கைப்பற்றப்பட்டுள்ளது. அதே 2023 ஆம் ஆண்டில் ஹஷீஷ் சென்ற போதை பொருள் 8 கிலோ வரை கைப்பற்றப்பட்டுள்ளது. நடப்ப ஆண்டில் மட்டும் 77 கிலோ போதைப்பொருள்கள் மத்திய போதை பொருள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 36,500 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு டி.ஜி.பி அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி ஆளுங்கட்சியாக மாறிய நாள் முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு டி.ஜி.பி அளித்த அறிக்கையே சான்றாகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களை போதைப்பொருள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது என்று ஏமாற்றுகிறார். இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தி.மு.க அரசை மன்னிக்க மாட்டார்கள். இனிமேலாவது தமிழக அரசு போதை பொருள் அதிகாரிகளுக்கு முழு உரிமையும் வழங்கி போதைப்பொருள் கடத்தலை முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.