
திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலில் ஒரு மன்னிப்பு. சமீபத்தில் எல்லோருக்கும் வருகின்ற…. எல்லாரையும் தாக்குகின்ற காய்ச்சல் எனக்கும் வந்து…. ஒரு வாரமாக என்னை படாத பாடு படுத்தி விட்டது. எனவே கொஞ்சம் அசதியாக இருக்கிறது. ஆகையினால், நீண்ட நேரம் நிற்க முடியுமோ என்ற பயத்தில் தான், உட்கார்ந்து பேசலாம் என கருதுகிறேன். அதை தான் அவரிடம் சொன்னேன். அதற்காக நிற்க முடியாது என்று அல்ல.
தலைவர் கலைஞர் உடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி, 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி வைத்து…. அணிகளுக்கு ஒரு கருத்துரை வழங்குகின்ற இந்த அற்புத நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய மாநகர செயலாளர் நண்பன் மதிவாணன் அவர்களே…. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி…. இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு தூண்டுகோலாக இருக்கின்ற… தமிழ் நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், அன்பு இளவல் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்களே….
இன்று வேறொரு நிகழ்ச்சிக்கு போக வேண்டிய சூழ்நிலை இருந்ததால் இங்கே முன்னிலை வகிக்க வர முடியாமல் இருக்கின்ற நேரு அவர்களே… வாழ்த்துரை வழங்கிய திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய இனிக்கோ இருதய ராஜ் அவர்களே…. நன்றியுரை ஆற்ற இருக்கிற, மருந்து கடை மோகன் அவர்களே…. குழுமியிருக்கின்ற மாவட்ட கழக – ஒன்றிய கழக – பகுதி கழக – செயலாளர் அவர்களே….
இயக்கத்தில் இருக்கின்ற பல்வேறு அணியை சார்ந்த நண்பர்களே…. நீண்ட நெடுங்காலம் எந்த பதவியை கூட பெறாமல், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று உறுதியோடு இருக்கின்ற இந்த இயக்கத்தில் இருக்கிற என் வணக்கத்திற்குரிய பெரியோர்களே… உங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் தெரிவித்தார்.