
தமிழக அரசு முறையாக விவசாயிகளுக்கு விவசாய கடனை வழங்க வேண்டும். மேலும் விவசாய தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் துணை நிற்பதோடு அவர்களுக்கு உதவியாக கடன் வழங்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதோடு அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர்.
மேலும் விவசாயிகளுக்கு பயிர் கடன், ஆடு, மாடு வாங்குவதற்கான கடன் வழங்கப்படும். அதோடு தள்ளுபடி செய்யப்படும் கடன்களுக்கு அரசு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனையடுத்து விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் எவ்வித சமரசமும் காரணமும் இருக்கக் கூடாது எனவும் விவசாயத்திற்கு தான் முதலில் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அவர்களது தொழிலுக்கு பாதிப்பை ஏற்படக் கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழக அரசு விவசாய கடனுக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு தாமதமின்றி கடன் வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று ஜி.கே வாசன் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.