மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை பெண் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணிடம் அரிவாள் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி அப்பு என்கிற தினகரன்(28) தான் அப்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் எடுப்பட்டது தெரிய வந்தது.  இதையடுத்து காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது