மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நான் தமிழக முதல்வராக பொறுப்பேற்கின்ற போது கடுமையான வறட்சி… குடிப்பதற்கு கூட பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவில்லை. சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையிலே நிதி ஒதுக்கி,  குடிநீர் பிரச்சினையை சரி செய்தோம், அது ஒரு சாதனை. அதற்குப் பிறகு கஜா புயல். டெல்டா மாவட்டம் முழுவதும் அழிந்துவிட்டது.

புயலால் கழக ஆட்சியிலே உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியருடன் கலந்து பேசி புயல் எந்த அளவுக்கு வீசியதோ,  புயல் வேகத்தை காட்டிலும் – வேகமாக செயல்பட்டு,  புயலுடைய அடிச்சுவடு இல்லாமல்… திறமையாக நிவாரண பணியை மேற்கொண்டு செயல்படுத்திய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்,  அப்போதும் சாதனை படைத்தோம்.

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பாசன விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அள்ளி அள்ளி கொடுத்தோம். பொது மக்களுக்கு நிவாரணத்தை அளித்தோம். விவசாயிகளுக்கு நிவாரணத்தை அளித்தோம். மக்களைக் காத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என்ற மக்கள் பாராட்டினார்கள் என தெரிவித்தார்.