ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.டி.சி பிரபாகரன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பழுதுபட்டு நிற்கிற….  விழுது விட்டு வளர வேண்டிய இயக்கத்திற்கு இன்றைக்கு விஷம் வைத்தவர்கள் யார் ? வளர்வதற்காக இன்றைக்கு வேயிலிலே நின்று வளர்வதற்குரிய வாய்ப்புகளை தடுக்கின்றவர் யார் ? என்பதை நாடு பார்த்துக் கொண்டே இருக்கிறது.

அந்த சரியான நேரம் வாய்க்க வேண்டும் அவ்வளவு தான். அந்த  சரியான நேரம் வாய்க்கும் போது…  என் அன்பு தலைவர், ஒருங்கிணைப்பாளர், அண்ணன் ஓபிஎஸ் அவர்களே… உங்களை இந்த நாடு நம்புகிறது. எதிர்கால உங்களை நம்புகிறது,  தொண்டர்கள் உங்களை நம்புகிறார்கள். எவ்வளவு சிரமம் இருந்தாலும்…  எவ்வளவு கஷ்டம் இருந்தாலும்…. உங்களுக்கெல்லாம் தெரியும். ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது ரொம்ப சாதாரண விஷயம் அல்ல.

ஓர் இடங்களில் பிரச்சனைகள் வந்தாலும்… அங்கே எல்லாம் எவ்வளவு அன்போடு…. நீங்கள் கரிசனையோடு பார்த்துக் கொண்டீர்கள் என்பதையெல்லாம் நாங்கள் அறிவோம். ஆனால் தொண்டர்கள் வீதிக்கு வந்தார்கள் என்றால் ? உண்மையான குற்றவாளி யார் என்பது உலகிற்கு  காட்டுவது தொண்டனுக்கு இருக்கின்ற உரிமை எல்லோரும் இருக்கு என்று புரிந்து கொண்டார்கள்.

உங்கள் அழைப்பை ஏற்றார்கள்…  அடுத்து அடுத்து ஆணையிடுங்கள். காத்து இருக்கிறோம் உங்கள் ஆணைக்காக உழைப்போம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாம் தாம் என்பதை ஊராருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம் என தெரிவித்தார்.