
இந்திய விமான படையின் தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் (59) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது விமான படையின் துணை தலைவராக இருக்கும் நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட விமானப்படையின் முதன்மை தளபதியாக பொறுப்பேற்க இருக்கிறார்.
தற்போது நாட்டின் விமானப்படை தளபதியாக இருக்கும் ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சொதாரியின் பதவி காலம் வருகிற 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் இதன் காரணமாக தற்போது புதிய தளபதியை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.