
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது “அஜித் கார் ரேஷிங்” என்ற கார் பந்தய அணியை தொடங்கியுள்ளார். இந்த அணியின் ரேஷிங் ஓட்டுநராக பெல்ஜியமைச் சேர்ந்த பேபியன் டபியூ என்பவர் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பியாவில் நடக்கும் 24H பந்தயத்தில் போர்ஷே 992 GD3 CUP பிரிவில் இவ்வணி பங்கேற்கும் எனவும் அவரது மேலாளர் கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்து அஜித் ரசிகர்களும், குறிப்பாக கார் ரேஷிங் விளையாட்டு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.