தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தி கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா மற்றும் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திகோட் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 5-ம் தேதி வெளியானது. இப்படம் திரையிட்ட முதல் நாளே 126 கோடி ரூபாய் வசூலித்தது. இந்தப் படத்தில் மட்ட என்ற பாடலில் விஜய் உடன் நடிகை திரிஷாவும் நடனமாடியுள்ளார். அதில் கில்லி படத்தில் உள்ள அப்படி போடு பாடலில் ஆடிய ஸ்டெப்பை ஆடியது ரசிகர்களுக்கு குதூகலப்பை ஏற்படுத்தி ஆட்டம் போட வைத்தது.

இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, விஜய் சாருக்கு திகோட் திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. மேலும் 3 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மேல் இருந்த திரைப்படத்தை சுருக்கி 3 மணி நேர திரைப்படமாக வெளியிட்டுள்ளோம்.

ஓடிடியில் வெளியாகும் போது முழு படத்தையும் வெளியிட முயற்சி செய்கிறோம் எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தன்னிடம் கோர்ட் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் என சொன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.