
சீன நாட்டில் உள்ள ஹீனான் மாகாணத்தில் சாங்டே நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. வழக்கம்போல பள்ளிக்கு மாணவர்கள் காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு வாகனம் ஒன்று வேகமாக வந்து பள்ளி முன் பகுதியில் மோதியது. இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இடித்ததா? அல்லது யாரேனும் திட்டம் போட்டு விபத்தை ஏற்படுத்தி உள்ளனரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த வாகனத்தை ஓட்டிய நபர் யார் என்ற விளக்கத்தையும் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து அறிந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்திலும், மருத்துவமனையிலும் பரிதவிப்பில் குவிந்துள்ளனர்.