
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு சார்ந்த பல குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி தற்போது ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என ஈமெயில் வருகிறது என்றால் கவனமாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் இந்த செய்திகள் ஆபத்தானவை எனவும் அந்த லிங்கில் சென்று நீங்கள் அப்டேட் செய்ய முயலும் போது தனிப்பட்ட தகவலை உள்ளிட நேரிடும் போது மோசடிகள் நடைபெறலாம்.
அதனால் ஆதார் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வை இணையதளத பக்கத்திற்குச் சென்று அப்டேட் செய்யலாம் எனவும் இல்லையென்றால் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆதார் கார்டை அப்டேட் செய்ய மெயில் மூலமாக அல்லது whatsapp மூலமாக எந்த ஒரு தகவலும் கொடுப்பதில்லை என்று தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு அடையாள சான்று மற்றும் முகவரி சான்று என எதையும் பகிர வேண்டாம். எனவே ஆதார் கார்டை அப்டேட் செய்ய இமெயில் வருகிறது என்றால் அதனை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.