கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த  சில நாட்களாகவே தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும். எனவே இடி, மின்னலின்போது பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். கால்நடைகளை மின் கம்பத்தில் கட்ட வேண்டாம்.