
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தினம் தோறும் மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பியை சேர்ந்த அருண்குமார் என்ற 53 வயது நபருக்கு மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறி அழைப்பு வந்துள்ளது. முதியவர் பெயரில் சட்டவிரோத பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறி அவரை அச்சுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் வரை அனுப்பியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இது போன்ற போலி அழைப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.