
ஹைதராபாத் அரசு திருநங்கைகளுக்கு போக்குவரத்து துறையில் பணிகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து துறை காவலாளிகளுக்கு உதவியாக அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து பணியில் அமர்த்த உள்ளதாகவும் தெரிவித்தது. அவர்களுக்கென்று தனித்தனி யூனிபார்ம் வடிவமைக்கப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது. இது குறித்து மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது, ஒதுக்கப்பட்ட மக்களின் வேலை வாய்ப்புகளை சரி செய்யும் நோக்கில் தெலுங்கானா அரசு இந்தியாவின் முதல் திருநங்கைகளுக்கான அரசு ஆள்சேர்ப்பு மற்றும் சமூக நல திட்டத்தையும் கொண்டு வர உள்ளது.
இந்த அறிவிப்பின்படி திருநங்கைகள் போக்குவரத்து துறையில் பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இச்செய்தி குறித்து அரசு அதிகாரி கூறியதாவது, திருநங்கைகள் போக்குவரத்து துறையில் பணியாற்றினால் மென்மையான சாலைப்போக்குவரத்து அமையக்கூடும் எனவும் மேலும் “அவன் /அவள்” தனிநபர்களுக்கென தனியான சீருடைகளை வடிவமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும், பணியில் உள்ளவர்களுக்கு மரியாதை மற்றும் சமத்துவம் உறுதி செய்யப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் முடிவு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.