
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தும் நிலையில் அந்த மாநாட்டு அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் விசிக திமுகவை தவிர்த்து பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது. இந்நிலையில் என்ற செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் முத்துசாமியிடம் நிருபர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, கொள்கை ரீதியான நோக்கத்தில் தான் விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறதே தவிர திமுக அரசரை எதிர்த்து அவர்கள் நடத்தவில்லை.
அதிமுக விசிக நடத்து மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என பொதுவாக தான் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் மது கடைகள் செயல்படுவதில் முதலமைச்சருக்கு துளி கூட விருப்பம் கிடையாது. அவரும் என்றாவது ஒருநாள் மது கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்றுதான் விரும்புகிறார். ஒரே நாளில் உத்தரவு போட்டு மது கடைகளை மூடிவிடலாம். ஆனால் அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் ஆராய்ந்து தான் சூழலுக்கு தகுந்தவாறு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறினார்.