நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது தொடங்கியது. இக்கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. அப்போது முதலைமைச்சர் கூறியதாவது, நீட் தேர்வு என்பது விலக்க முடியாத தேர்வல்ல. பயிற்சி மையங்களுடைய  நலனுக்காக யாரோ சுயநலத்திற்காக சொல்லி, ஒன்றிய அரசை தவறாக வழி நடத்தி, நடந்த தேர்வு இது.

அதையும் முறையாக நடத்தவில்லை என்பதை பல்வேறு மாநிலங்களில் CBI மூலம் வழக்குகள் நடைபெற்ற வருவது உங்களுக்கு தெரியும். நேற்று உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. நமது சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்