ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட வாடக வாகன டேக்ஸிகளின் செயலிகளை பயன்படுத்தி பலரும் தற்போது பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் ஊபர் செயலி உள்ளது. இந்த 2 செயலிகளை பயணப்படுத்தி ஒரே பயணத்திற்கு புக் செய்தோம். ஆனால் இந்த 2 போன்களிலும் வெவ்வேறு கட்டணங்களை காட்டுகிறது என்று சுதிர் என்ற பயணர் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அந்த பதிவில், ஒரே பயணத்திற்கு எனது மகளின் ஆண்ட்ராய்டு போனில் உள்ள ஊபர் செயலில் 290.79 காட்டுகிறது. ஆனால் என்னுடைய ஐபோனில் 342.47 ரூபாய் காட்டுகிறது.

அதனால் என்னுடைய மகளின் செல்போனிலிருந்து தான் பெரும்பாலும் நான் புக் செய்வேன். உங்களுக்கும் இது நடந்திருக்கிறதா என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் ஊபர் செயலில், 2 செல்போனில் இருந்து வெவ்வேறு கட்டணங்களை காட்டுவதை ஸ்கிரீன்ஷாட் எடுத்தும் பதிவிட்டுள்ளார். இதற்கு ஊபர் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், இந்த 2 சவாரிகளிலும் உள்ள பல வேறுபாடுகள் விலைகளை அதிகமாக காட்டுகிறது என்று கூறியுள்ளது. அதாவது இதில் பிக்கப் பாய்ண்ட் வாடிக்கையாளர்களின் இடத்திற்கு வரும் நேரம் மற்றும் ட்ராப் பாயிண்ட் வேறுபடுகிறது. அதற்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. செல்போன்களின் அடிப்படையில் பயண விலைகளை ஊபர் ஒருபோதும் மாற்றி அமைக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.