அமெரிக்காவில் பிறந்து ஜெர்மன் நாட்டின் குடி உரிமையை பெற்றுள்ளம்  மோபியஸ் சர்வதேச விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தற்போது மேற்கு ஆசியா மோதல் நடந்து கொண்டிருக்கும்                    ரஷ்யா – உக்ரைன் போர் போன்றவற்றில் பிரதமர் மோடி மிக முக்கியமான சமாதானம் செய்பவராக இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு தலைசிறந்த தலைவராக இருப்பதோடு சிறந்த மனிதரும் ஆவார். சர்வதேச அளவில் அவரது பங்கு இன்னும் முக்கியத்துவம் பெறும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவரால் உலக அளவில் அரசியல் தலைப்பில் அனைத்து தரப்பினருடன் உரையாட முடியும்.

என்னை பொருத்தவரை அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு பிரதமர் மோடி தகுதியானவர் என்று கூறியுள்ளார். மேலும் நடுநிலை மற்றும் அனைவருக்கும் நியாயமாக இருப்பதில் இந்தியா தனது திறனை வெளிப்படுத்தியுள்ளது. அதோடு ரஷ்யா- உக்ரைன் மோதலில் நடுநிலையாக காணப்பட்ட போதிலும் பிரதமர் மோடி தொடர்ந்து அமைதியான தீர்வையே வலியுறுத்தியுள்ளார். 1992 இல் ராஜா ரீதியிலான உறவுகளை ஏற்படுத்திய பின்னர் இந்திய பிரதமர் ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு மேற்கொண்ட முதல் பயணமாக மோடியின் பயணம் அமைந்தது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமைதியை மேம்படுத்துவதில் இந்தியாவின் தீவிர ஈடுபாட்டை இந்த பயணம் சுட்டி காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.