
தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்து My Role model for Sunday எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த காணொளியில் குழந்தை ஒன்று தனது நெற்றியில் கொடுக்கப்படும் மசாஜை ரசித்து மகிழ்கிறது.
இந்த ஒரு காணொளி வாரத்தில் ஆறு நாட்கள் கடுமையாக உழைத்து ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறலாம்.
அப்படி அந்த குழந்தை அமைதியாக தனக்கு கொடுக்கப்படும் மசாஜை ரசித்துக் கொண்டிருந்தது. ஆனந்த மகேந்திரா அவர்கள் பகிர்ந்த இந்த காணொளி வைரலான நிலையில் பயனர்கள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
This kid is my role model for #Sunday
🙂— anand mahindra (@anandmahindra) August 18, 2024
சிலர் குழந்தை நல்ல பாடத்தை புகட்டி உள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமையை கொண்டாட சிறந்த வழிமுறை என்றும் பதிவிட்டுள்ளனர். அதேபோன்று சிலர் ஞாயிற்றுக்கிழமை வீட்டை சுத்தப்படுத்தி மீதம் இருக்கும் வேலைகளை பார்க்க வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நேரம் இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளனர்.
எது எப்படியோ இந்த காணொளியில் குழந்தையின் முக பாவனைகள் பார்த்த நொடியிலாவது பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.