சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவர் சமீபத்தில் சிறுமி ஒருவர் அளித்த புகாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை மதன் குமாரின் சகோதரர் பாபு அறிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.

இந்த தாக்குதலில் சிறுமியின் முகம், கை, கால், தலை உட்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சிறுமியை அறிவாளால் வெட்டிவிட்டு ஓடிய பாபுவையும், அவரது கூட்டாளிகளையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.