மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் மாநில மந்திரியுமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோவின் சகோதரர் அன்மோல் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில் அவர் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று வந்தது தெரியவந்தது மேலும் அமெரிக்கா அவரை கைது செய்ததாக தகவலும் வெளியானது. இந்நிலையில் என்.ஐ.ஏ அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் அமெரிக்கா அவரை கைது செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதனைத் தவிர மற்ற விரிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாலிவுட் நடிகர் வீட்டிற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அன்மோல் ஈடுபட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. அதோடு அவரை குறித்து தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என என்.ஐ.ஏ தெரிவித்திருந்தது. வார தொடக்கத்தில் அன்மோலை நாடு கடத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை எந்த தகவலையும் வெளியிட மறுத்தது. இவருக்கு எதிராக லுக்கா நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், நிதி சேர்த்தல் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு அன்மோல் உள்பட 9 பேர் மீது என்.ஐ.எ வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.