
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிஞர் அண்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இன்றைய தினம் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் வாழ்த்து பதிவினை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த வாழ்த்து பதிவில், சுயமரியாதை திருமணங்களை சட்டபூர்வமாக்கியது. மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தது. தமிழ் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை செயல்படுத்தி தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் அவர் தமிழ்நாட்டுக்கு ஆட்சிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இன்று கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அதற்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
