அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். சாட்சி விசாரணை வரும் 15ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் மற்றும் ஆதாரம் உள்ளதாக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.