
தமிழக பாஜக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜகவில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரிய பெரிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் குறைபாடுகளை சரிசெய்து, கட்சியை தமிழகம் முழுவதும் வளர்த்தெடுக்கும் வகையில் மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வந்தார். பல போராட்ட அறிவிப்பு வெளியிட்டார்.
குறிப்பாக அண்ணாமலையில் செயல்பாடுகளால் மேல்மட்ட தலைவர்களோடு மோதல் போக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டன. அதே நேரத்தில் அண்ணாமலைக்கு எதிரான செயல்பாடுகளும் கட்சிக்குள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே அண்டை மாநில பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தபோதிலும் அவர் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் அடுத்தடுத்து கருத்துக்களை ட்விட்டர் வாயிலாக பகிர்ந்து வந்தார். இதனால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட காயத்ரி ரகுராம் அண்ணாமலை அண்ணாமலைக்கு எதிராக நேரடியாக மோதல் போக்கில் ஈடுபட தொடங்கி உள்ளார்.
அண்ணாமலை ஏதேனும் கருத்து சொன்னாலும் சரி, ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டாலும் சரி, ஏதேனும் முடிவெடுத்தாலும் அதற்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வரும் அவர் தமிழக அரசியல் சூழல், நிலவரம் தொடர்பான கருத்துக்களையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அவன் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியலை யார் பார்க்க வேண்டும்? காலி ஓ ஜிம்கானா #AnnamaLIE
அவன் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியலை யார் பார்க்க வேண்டும்? காலி ஓ ஜிம்கானா #AnnamaLIE pic.twitter.com/0dHy3QTvUP
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) July 1, 2023
என்னமாகன்னு சௌக்கியமா? டயபர்ரூம் ஸ்டார்ட்ம்யூசிக். https://t.co/c4VhhFGTSc
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) July 1, 2023
Cheap standards. Sick talking about women again. Now attacking .@jothims I totally condemn #AnnamaLIE disrespect women. pic.twitter.com/wFirAwmpnn
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) July 1, 2023