
நடிகர் எஸ்.வி சேகர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணாமலை பாஜக கட்சிக்கு வருவதற்கு முன் பாஜக நன்றாக இருந்தது என அவர் கூறியுள்ளார். அண்ணாமலை பாஜகவில் கட்சி பொறுப்பேற்ற பிறகு, சமுதாயத்தில் குற்றவாளிகளாக கருதப்படும் சிலருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக எஸ்.பி சேகர் கூறியுள்ளார்.
அண்ணாமலை கடந்த சில 2 மாதங்களாக இந்தியாவிற்கு வெளியே இருப்பதால் இந்த செயல்பாடுகள் குறைந்துள்ளதாக அவர் கூறினார். அதே நேரத்தில், அண்ணாமலை மீண்டும் இந்தியா திரும்பிய பிறகு, இதுபோன்ற அதிர்ச்சி தரும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கலாம் என நடிகர் எஸ்.வி சேகர் கருத்து வெளியிட்டார்.
அண்ணாமலையின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், எஸ்.வி சேகரின் இந்த கருத்துகள் மேலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.