
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், 55 ஆண்டு காலமாக ஒரே குடும்பம்…. திமுகவையும் கொள்ளை அடிக்கிறது….. இந்த தமிழ்நாட்டையும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. குடும்பக் கட்சி… அதனால்தான் பொதுச்செயலாளர் கூட்டத்தில் கூட சொன்னார். அது கட்சி அல்ல, அது மார்வாடி கம்பெனி… கார்ப்பரேட் கம்பெனி… அவர் கூட கௌரவமா சொன்னாரு…. என்னா… அவரு தகுதிக்கு அவரு கௌரவமாக தான் சொல்ல முடியும்.
நம்ம தகுதிக்க ஏத்த மாதிரி பேசுவோம். அது ஒரு மார்வாடி, கந்துவட்டி கம்பெனி, திமுக கோபாலபுரம் குடும்பம் ஒரு கந்துவட்டி குடும்பம். மந்திரி எல்லாம் யார் என்றால் ? கந்துவட்டி வசூல் பண்ணி கொடுக்கிற ஏஜென்ட்கள்.இன்றைக்கு தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான் எம்ஜிஆர் பிறகு அம்மா…. அம்மாவிற்கு பிறகு ஒரு சாதாரண தொண்டன் எடப்பாடி, தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சர்…
இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர்…. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர். அவருக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் வரலாம் ? இங்கு இருக்கக்கூடிய மீசைக்காரன் கூட வரலாம். யார் வேண்டுமானாலும் வரலாம். இரண்டு கோடி தொண்டர்களில் யார் வேண்டுமானாலும் கனவு காணலாம்.. உரிமை இருக்கிறது… இரண்டு கோடி தொண்டனுக்கும் உரிமை உள்ளது… நீ எந்த பதவிக்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம்… எம்எல்ஏ வேண்டுமா ஆசைப்படு….எம்பி ஆகணும்ன்னு ஆசைப்படுறியா ? ஆசைப்படு என தெரிவித்தார்.