
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் 40க்கும் அதிகமானோர் திமுகவில் சேர தயாராக இருப்பதாகவும், ஆனால் மு.க.ஸ்டாலின் அதை ஏற்க மறுத்ததாகவும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவைச் சேர்ந்த பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அப்பாவு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பாவு திறப்பு வழக்கறிஞர் கூறியதாவது, சம்மன் தங்களுக்கு வரவில்லை என்றும், வந்திருந்தால் அப்பாவு நேரில் ஆஜாராகி இருப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் சம்மனை நிராகரிக்கவில்லை என்றும், கோர்ட் கூறும் தேதியில் அப்பாவு ஆஜார் ஆகுவார் என்றும் தெரிவித்தார். அதன் பிறகு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அத்துடன் வருகிற 13-ஆம் தேதி அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.