செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இன்னைக்கும் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால், நான்  தெலுங்கானாவில் நான் சொல்லிட்டேன். நான் பேசுவதற்கு தயார், முதலமைச்சர் வரட்டும்னு ஏற்கனவே நான் சொல்லி இருந்தேன். அதனால, அங்குள்ள பிரச்சனைகளை நான் எப்படி தீர்க்கணுமோ,  நான் தீர்த்து இருக்கிறேன். எதையுமே நான் பெண்டிங் வைக்கல…  நான் தீர்த்து இருக்கிறேன்.

இன்னும் சொல்ல போனால் மக்கள் என்னை பாராட்டுகிறார்கள். அவங்களுடைய சில பிரச்சினைகளை கையில் எடுத்து தீர்த்து இருக்கிறேன். உதாரணத்திற்கு, டிரான்ஸ்போர்ட் பிரச்சனை, 42 ஆயிரம் தொழிலாளர்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சனை.  ஏறக்குறைய ஒரு வாரத்துல நான் கன்சல் கொடுத்தேன்.

ஆனால் எதிர் அணியைச் சார்ந்த தொழிற்சங்க வாதிகளையும் கூப்பிட்டு, அவர்கள் என்ன கோரிக்கை வைக்கிறாங்க  என அதையும் சேர்த்து அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதை நான் நிறைவேற்ற வைச்சேன். அதனால, நீங்க தெலுங்கானாவை பார்க்க வேண்டாம்.தமிழ்நாட்டில்  என்ன நடக்குது? இப்படியே சண்டை போட்டுட்டு இருக்கிறதை விட, உட்க்காந்து பேசலாம் என தெரிவித்தார்.