கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். அவர் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். அவர் படுத்து இருந்து ரயில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்தது. அவர் சிறிதும் பயமின்றி அந்த தண்டவாளத்தின் நடுவே படுத்து இருந்தார். ரயிலும் அவரைத் தாண்டிச் சென்றது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

அந்த ரயில் சென்ற பிறகு, சர்வ சாதாரணமாக எழுந்து தள்ளாடிய படியே போதை ஆசாமி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்தவர்கள் ரயில்வே காவல்துறையினரிடன் தகவல் தெரிவித்தனர். அதன் படி, தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Last 24 Hours News (@last24hrsnews)