கள்ளக்குறிச்சியில் உள்ள பகுதியில் தனவேல்(40), அருள்மொழி(33) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அன்று குடிபோதையில் தன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து விட்டு உறங்கியுள்ளார். மறுநாள் காலையில் அவரது மனைவி எழுப்பிய போது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனவேலின் தம்பியான கருப்பன்(39) என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், தனவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் மூச்சு திணறி இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தெருவில் ஒரு மர்ம நபர் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு நடமாடியது தெரியவந்தது. இதையடுத்து அருண்மொழியிடம் விசாரணை நடத்தியதில் அவரும், அவரது கள்ள காதலனுமான சரவணன் ஆட்டோ டிரைவர் என்பவரும் சேர்ந்து தனவேலை கொலை செய்தது தெரியவந்தது.