
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் ராணுவ அதிகாரி ஒருவர் உயர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாவலர் நசீர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகியோரை வியாழன் கிழமை தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டு கொன்றனர். இதன் காரணமாக தீவிரவாதிகளை தீவிரமாக தேடும் பணியில் ராணுவத்தினர் கடந்து சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து தீவிரவாதிகள் இடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை சுற்றி வளைத்தனர். இதை அறிந்த தீவிரவாதிகளும் தாக்குதலை நடத்தினர். இதைத்தொடர்ந்து இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஜூனியர் அதிகாரியான நாயப் சுபேதார் ராகேஷ் குமார் உயிரிழந்த நிலையில் தீவிரவாதி தரப்பிலிருந்து யார் யாருக்கு என்னென்ன படுகாயம் அடைந்தது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.