தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எலவடை கிராமத்தில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்த பூவரசன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மொரப்பூர் நோக்கி சென்றார்.

இந்நிலையில் அய்யர் கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பூவரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.