
வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்து கோவில்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து பேரணி ஒன்றில் அவர் வங்கதேசத்து கொடியை அவமதித்து விட்டதாக கைது செய்யப்பட்டார். இதில் இந்துக்களின் வீடுகள் மற்றும் கோவில்கள் சூறையாடப்பட்டு வந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.
தற்போது வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து மத தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் கைது செய்யப்பட்ட ‘சமிலிதா சநாதனி ஜோட்’ அமைப்பைச் சேர்ந்த கிருஷ்ண தாஸை சிறையில் சந்திக்க ஒருவர் சென்றுள்ளார். அப்போது மற்றொரு இந்து மத தலைவரான ஷ்யாம் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் வங்கதேசத்தில் இந்து துறவிகள் கைது செய்யப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவர் ராதாராம் தெரிவித்துள்ளார்.