தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பான முறையில் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பீகார் முதல்வர் தமிழகத்திற்கு வருகை புரிகிறார். இந்நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 3-ஆம் தேதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் தமிழின தலைவர் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் வடசென்னையில் நடைபெறும்.

இந்த நாளில் அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும். மாவட்ட வாரியாக 2023 ஜூன் 3-ஆம் தேதி முதல் 2024 ஜூன் 3-ம் தேதி வரை ஒரு வருட காலத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை  நடத்த திட்டமிட்டுள்ளோம். திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் திறந்து வைக்கிறார். அனைத்து ஊர்களிலும் உள்ள திமுக கொடி கம்பத்தை புதுப்பிக்க வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.