டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 சட்டசபை தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் களம் இறங்கினர். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 60% வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புப்படி, பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கப்பட்டது. முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இந்நிலையில் டெல்லி முதல்வரும் கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருமான அதிஷி வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இது சாதாரண தேர்தல் கிடையாது, நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம். இந்த போராட்டத்தில் டெல்லி மக்கள் நல்லவர்கள், ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் நான்காவது முறையாக முதல்வராகுவார் என்று கூறினார்.