எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதற்கு முக்கிய அம்சங்களாக அவர்கள் முன்னிறுத்துவது விலைவாசி உயர்வு,  வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின்  ஊழல். பாஜக ஊழல்கரை படியாத கட்சி. பாஜகவில் எந்த ஒரு ஊழலும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சொல்லி வரும் சூழலில்,

சமீப காலமாக சில விஷயங்கள் பாஜகவுக்கு பின்னடைவாக இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தணிக்கை குழு அறிக்கை ஏழரை லட்சம் கோடி அளவுக்கு முறைகேடாக செயல்பட்டு இருக்கின்றது. அதில் ஊழல் இருக்கின்றது என்று ”இந்தியா” கூட்டணி கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது மனைவியின் கணக்கில் 10 கோடி ரூபாய் மத்திய அரசின் மானியம் பெற்று இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை தற்போது எழுப்பி இருக்கின்றர்கள்.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை இந்தியா கூட்டணி கட்சியினர் பாஜகவின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த தொடங்கி இருக்கிறார்கள். எனவே அதை ஒரு முக்கிய பிரச்சாரப் புள்ளியாக வைப்பது என்ற ஒரு முடிவை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கின்றது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு  எடுப்பதை தொடர்ச்சியாக தடுத்து வரும் விதமாக பாரதிய ஜனதா கட்சி செயல்படுகின்றது என்பது அவர்களது குற்றச்சாட்டாக உள்ளது.