டைரக்டர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்திருக்கும் பீட்சா-3 படத்தின் முதல் பாடலைப் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த பீட்சா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா-2 படம் வெளியானது. தற்போது நடிகர் அஸ்வின் நடிப்பில் பீட்சா-3 உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த நிலையில் அருண் ராஜ் இசையில் இப்படத்தின் முதல் பாடலான “கண்ணே கண்மணியே” பாடலைப் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் பீட்சா-3 திரைப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.