
கஜகஸ்தான் நாட்டில் 65 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. அதன் பின்னர் கடந்த ஜூலை 2024, அவரது வயிற்றின் வீக்கம் அதிகமாக இருந்தது.
அதாவது அவரது வயிற்றின் அசாதாரண அளவை விட அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் பயந்து போன அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவரது வயிற்றில் ஒரு பெரிய கட்டி இருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் ஆபத்தான வகையில் வளர்ந்திருக்கும் கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறினர். இதைத்தொடர்ந்து ஆன்காலஜி மற்றும் கதிரியக்க ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர்கள் அந்த மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
அவரது வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட கட்டியின் அளவைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது சுமார் 30 கிலோ எடை கொண்ட கட்டி அவரது வயிற்றில் இருந்துள்ளது. மேலும் அந்த பெண் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.